Showing all 4 resultsSorted by popularity
-

$14.99
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற அலகிலா விளையாட்டு, 2004ம் ஆண்டு பாரா, பாரதிய பாஷா பரிஷத் விருது பெறவும் வழி வகுத்தது.
-

$24.99
திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்க ளின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது. திரைப்படம் – தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல். இந்தக் கதையை ஒரு…
-

$22.99
இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை. பிரபஞ்ச விதிகள் எதற்குள்ளும் அடங்காத காட்டாறாகப் பெருகும் இசையிலிருந்து பிறக்கிறான் இந்நாவலின் நாயகன். வண்ணங்களும் வாசனைகளும் அற்ற அவனது வாழ்க்கையே அவன் உருவாக்கும் பேருலகின் மைய விசையாகிறது. காலத்தை வெல்ல அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில் எல்லாம் பேரண்ட வெடிப்பு உருவாகிறது. பா. ராகவனின் ‘இறவான்’, மிக நுணுக்கமான, முள் நேர்த்தியுடன் கூடிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் தனித்துவமான நாவல். ஒரு…
-

$29.99
காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று…