Zero Degree

Showing all 14 resultsSorted by popularity

  • Cover image for Azhiyasol

    Azhiyasol

    $17.99

    மலை உச்சியில் ஊற்றெடுத்த கணத்திலிருந்து நதியைப் போல நழுவிச் சென்று கொண்டே இருக்கும் இடையறாத மனவெழுச்சி பொங்கிப் பெருகி ஓடும் ஒரு கதைசொல்லியின் குரல். அந்த நதியில் பழுத்த இலைகளை மிதந்து செல்லும் எதிர்பாரா தக்கை நிகழ்வுகள். தண்ணென்று கனிந்த நிலவாய் ஆழத்தில் எதிரொலிக்கும் கதைசொல்லியின் கனலும் இருப்பு. பெண் உடல் பிம்பம் உடைபடும் தருணங்களும், அதனடியில் இழுபடும் அறிந்திடாத அறத்தின் கயிறுகளும் நூறாயிரம் அடியார்களும் அவளது தனிமையின் நதியாய் பாய்ந்திட தூண்டுகின்றன. ஒருமுறை கால் வைத்த…

    Add to cartLoading Done
  • Cover image for Valar Kadhal Inbam

    Valar Kadhal Inbam

    $10.99

    காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே! சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காது. இந்தக் குறுநாவலின் கதைக்களம் புலம்பெயர்ந்த மண் என்பதால் வாழ்க்கைமுறை எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டிருப்பதை, நாவலின் உபதலைப்புகளில் இருந்தே அறிய முடிகின்றது. காதல், இன்பம், துன்பம், சோகம், விருப்பு, வெறுப்பு, பொறாமை என்று…

    Add to cartLoading Done
  • Cover image for Kadalil Erindhavai

    Kadalil Erindhavai

    $16.99

    அவ்வளவு பதற்றம் நிலவும் நாடு என்பது முதல் பார்வைக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது. தூதரக அதிகாரி ஒருவருடன் காலைச்சிற்றுண்டியோடு பேசிக்கொண் டிருக்கையில், அவர் சொன்னாராம் இந்த அமைதியின்மையின் பின்புலம், ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி அல்ல. உள்நாட்டு நிலவரத்தைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் வல்லரசுக்கு யார் அதிக நெருக்கமாக இருந்து கனிமவளத்தைச் சுரண்டித் தருவது என்பதையொட் டிய தகராறு மட்டுமே. இல்லையே, உலக ஊடகங்கள் தரும் செய்திகள், ஒரே மதத்தின் இரு பிரிவுகளுக் கிடையில் பிரச்சினை என்றல்லவா சொல்கின்றன?…

    Add to cartLoading Done
  • Cover image for Porkuthirai

    Porkuthirai

    $16.99

    கலையின் மீதான அவநம்பிக்கை மனிதர்களை பலவீனமாக்கும். ஒரு சமூகத்தின் கலாச்சார மாற்றங்களையும், வாழ்க்கைக் குறித்தான அர்த்தங்களையும் நுண்மையாக அணுகவும் புரிந்து கொள்ளவும் கலை வடிவங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றன. லட்சியங்களும் நோக்கங்களுமின்றி விட்டேத்தியாய்த் திரியும் சமூகத்திற்கென கலைஞன் தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான். இலக்குகளை நோக்கி ஓடுகிறவர்களுக்கு லட்சியம் என்பது தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமில்லை என்பதைத் திரும்ப திரும்ப உணர்த்த வேண்டியுள்ளது. இலக்கிய வாசிப்புதான் இலக்குகளைத் துரத்தும் மனிதர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ‘மனித…

    Add to cartLoading Done
  • Cover image for Fire of Sumatra

    Fire of Sumatra

    $15.99

    A massive red fire demon came fiercely, swallowing jungles and burping them out as smoke. It killed several lives on its way and separated a tigress from its three cubs. The three-perspective story follows the lives of the three cubs, the separated mother and a team of environmentalists who relentlessly fight for restoring the pristine…

    Add to cartLoading Done
  • Cover image for Saabakumizh

    Saabakumizh

    $10.99

    கடந்த இரு பத்தாண்டுகளில் நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் படைப்புகளில் பெரிதளவில் வெளிப்பட்டிருக்கவில்லை. வாழ்வையும் அதன் சிக்கலான முரண்களையும் உள்ளார்ந்து பார்க்கும் படைப்பாளிகள் வெகு சொற்பமாகவே வருகிறார்கள். இந்தத் தலைமுறையின் பிரதான சிக்கலென்பது எதன் மீதும் நம்பிக்கையற்று இருப்பது. லட்சியவாதங்கள் பொய்த்துப்போன இவர்களிடம் தேடல் குறைந்து போனதைக் கண்கூடாய்ப் பார்க்கமுடிகிறது. முழுக்க நகர்மயமாதலுக்குப் பிறகான வாழ்க்கை மட்டுமே பெரும்பாலான கதைகளில் வெளிப்படுவதைப் பார்க்கையில் கிராமங்களில் இருந்தும் சிறு நகரங்களில் இருந்தும் எழுது வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனதோ…

    Add to cartLoading Done
  • Cover image for Alliikkeni

    Alliikkeni

    $18.99

    ராம்ஜீக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடேதான் ஏற்க முடியும். நேர்த்தியும், சொல்ல வந்ததை ‘இதுதான் இப்படித்தான்’ என்று சொல்லிச் செல்லும் நேரடித்தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. வாழ்தல் இனிது – ஆத்மார்த்தி ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. – கணேசகுமாரன் எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த…

    Add to cartLoading Done
  • Cover image for Yugadharmam

    Yugadharmam

    $13.99

    தொடர்ந்த வாசிப்பின் நீட்சியாய், இனி எழுதாமல் தீராது என்று (ஒரு அசட்டுத்துணிச்சலில்) எழுதிப்பார்த்த கதைகள் இவை. இலக்கிய/இடைநிலை இதழ்கள் (கணையாழி, நவீன விருட்சம், அந்திமழை), வணிக இதழ்கள் (கல்கி, குங்குமம், தினமணி கதிர், தமிழ் இந்து காமதேனு) மற்றும் இணைய இதழ்கள் (சொல்வனம், மலைகள், உயிரோசை, வல்லினம், கீற்று) போன்றவற்றில் வெளியானவை.

    Add to cartLoading Done
  • Cover image for Unit 109

    Unit 109

    $15.99

    இது உங்களைச்சுற்றி நடக்கும் கதை தான். ஆனால் சாமானியர்கள் பற்றிய கதையல்ல. சொல்லப்போனால் இது கதையே அல்ல, முழு நிஜம். அதைச் சொன்னால் நீங்கள் நம்பவாப் போகிறீர்கள்? யார் கண்டது நாளை இது உங்கள் அருகேயும் நடக்கலாம். அப்போது நம்பினாலும் நம்புவீர்கள். அது வரை பத்திரமாகவே இருங்கள். -பெக்கா.

    Add to cartLoading Done
  • Cover image for Siling

    Siling

    $9.99

    இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டது போலவே சிலிங் நாவலும் பேசப்படும். -முல்லைநாதன்

    Add to cartLoading Done
  • Cover image for Kullasithan Sarithiram

    Kullasithan Sarithiram

    $19.99

    மாற்று மெய்மை தன்மையை விட அதில் கலந்திருக்கும் ஃபேண்டஸி அம்சம் எனக்கு கவர்ச்சி ஊட்டுகிறது கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்கு பயணிக்கும் யானைகளுக்கு ஈடான சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கிறது இந்த விதமான சிந்தனைப் போக்கு. இந்த மாற்று தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள் கருதுகோள்கள் தர்க்க நியாயங்கள் மரபுவழி வளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர, அறிவியலின் வழிமுறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே முழுமையான ஒரு அனுபவம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன. இது போன்ற ஆதாரங்களை விடவும்…

    Add to cartLoading Done
  • Cover image for Kizhavanin Kadhali

    Kizhavanin Kadhali

    $12.99

    போரில் மடிந்த யானைகளின், குதிரைகள் மற்றும் வீர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக்கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் தொர்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும். அவற்றையெல்லாம் உண்டு பூச்சிகள் தூய்மை செய்கின்றன. சிறு சதைத் துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் உன்ன வேட்டை விலங்குகளால் கூட முடியாது. ஆனால், பூச்சிகளால் அவற்றைத் தடயமில்லாமல் தின்று ஏப்பம் விட்டுவிட முடியும். – ‘பூச்சி’ சிறுகதையிலிருந்து…

    Add to cartLoading Done
  • Cover image for Boomerang

    Boomerang

    $14.99

    அரசியல் குழப்பம், தனிமனித உறவுகளின் சிக்கல், பன்னாட்டு வணிகமயமாதலின் பண்பாட்டுச் சிதைவுகள், சுயமரியாதையையும், சமூக நீதியையும் சுமக்கும் கதை மாந்தர்கள், நடந்த நிகழ்வுகளினூடே, அறிந்த தலைவர்களினூடே கற்பனைப் பாத்திரங்களும் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவல் போடும் புதிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விட்டாலும், நாவல் எழுப்பிச்செல்லும் கேள்விகளுக்கு விடையைத் தேடிச் சில காலமேனும் மனம் அலையும். – சத்யராஜ்குமார் எழுத்தாளர், வாஷிங்டன், அமெரிக்கா.

    Add to cartLoading Done
  • Cover image for Poliga Poliga

    Poliga Poliga

    $29.99

    காற்றும் கனலும் கலந்தாற்போல் ஒரு பேரொளி அங்கு தோன்றியது. பஞ்ச பூதங்கள் அதனுள் ஒடுங்கின. தேவர்களும் சப்த ரிஷிகளும் ஒடுங்கினார்கள். அதுவரை யாரும் கேட்டறியாத ஒரு பிரம்மாண்ட சீற்றத்தின் ஒலி, சுருதியைப் போல் வெளியெங்கும் பரவி நிறையத் தொடங்கியது. அபூர்வமாக, அந்த ஒலிக்கு மணம் இருந்தது. அதைச் செவிகள் உணர்ந்தன. அது துளசியின் மணத்தை ஒத்திருந்தது. அது அசைந்தது. அசையாமலும் இருந்தது. தோன்றிய பேரொளியின் நடு நெற்றியில் இருந்து அந்த ஒலி வந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. சட்டென்று…

    Add to cartLoading Done